வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

 

போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.
சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான்(51) 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக்கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அக்ஷய் குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட்  சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முறையே 4, 5 வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 98.25 கோடி ரூபாயும், 82.50 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.
நடிகர் அமீர்கான் ரூ. 68.75 வருமானத்துடன் 6-வது இடத்தில் உள்ளார். நடிகை  பிரியங்கா சோப்ரா ரூ. 68 கோடி வருமானத்துடன்  7 வது இடத்திலும் டோனி 63.77 கோடி வருமானத்துடன்  8-வது இடத்திலும் உள்ளார்.
ஹிர்திக் ரோஷன் ரூ.63.16 கோடி வருமானத்துடன் 9-வது இடத்திலும், ரன்வீர் சிங் 62.63 கோடி வருமானத்துடன் 10 வது இடத்திலும் உள்ளனர்.
2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பின்னர் பேட்மின்டன் வீராங்கனை பிவி.சிந்துவின் வருமானம் 17 மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் இவர் 57.25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இவர் 13 வது இடத்தில் உள்ளார்.
1) சல்மான் கான் (ரூ 232.83 கோடி)
2) ஷாருக்கான் (ரூ. 170.50 கோடி)
3) விராட்கோலி (ரூ .100.72 கோடி)
4) அக்ஷய் குமார் (ரூ. 98.25 கோடி)
5) சச்சின் தெண்டுல்கர் (ரூ. 82.50 கோடி)
6) அமீர்கான் (ரூ .68.75 கோடி)
7) பிரியங்கா சோப்ரா (ரூ 68 கோடி)
8) எம்.எஸ். டோனி (ரூ 63.77 கோடி)
9) ஹிர்திக் ரோஷன் (ரூ. 63.12 கோடி)
10) ரன்வீர் சிங் (62.63 கோடி ரூபாய்)
இந்த பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இடம்பிடித்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிப்பவராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.
இவர் 12வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் ரூ.57.6 கோடி. இவருக்கு அடுத்தப்படியா சூர்யா 25வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 34 கோடி.
அஜித் 31.75 கோடி வருமானத்துடன் 27-வது இடத்திலும், விஜய் 29 கோடி வருமானத்துடன் 31-வது இடத்திலும் உள்ளனர். பாகுபலி இயக்குனர் ராஜமவுலி 55 கோடி வருமானத்துடன் 15வது இடத்திலும், நடிகர் பிரபாஸ் 36 கோடியுடன் 22வது இடத்திலும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் படங்களை தேர்வு செய்து நடிப்பதாலும், விளம்பரங்களில் அதிகம் இடம்பெறாமலும் இருப்பதால் இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
327 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன