செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

 

கோடங்கி விமர்சனம்

வேழம் வித்தியாசம்!

 

ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார்.

காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது.

7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க்கிற ரசிகனை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருந்தால் படம் பேசப்படும்.

அதே நேரம் லாஜிக் மீறாமலும் இருக்க வேண்டும். நம்பும்படியாக காட்சிகள் இருக்க வேண்டும் இதை இயக்குனர் கொண்டுவர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் அதற்காக அவரை பாராட்டலாம்.

முதல் பாதியில் கதையை நகர்த்துவதற்கு ரொம்ப மெனகெட்டாலும், பின்பாதி கதை வேகமெடுத்து முடிவதால் ரசிகரும், படக்குழுவும் தப்பிக்கிறது.

அசோக் செல்வன் இதில் கொஞ்சம் நடித்திருக்கிறார். கொஞ்சம் வாழ்ந்திருக்கிறார். த்ரில்லர் கதை விரும்பும் ரசிகர்களை வேழம் ஏமாற்றாது!

மதிப்பீடு – 3/5

கோடங்கி

160 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன