வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் – கோடங்கி விமர்சனம்

மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் – கோடங்கி விமர்சனம்

 

 டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் மாயோன்.படத்தை இயக்கியவர் என்.கிஷோர்.


சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேராடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசைஇளையராஜா, ஒளிப்பதிவு ராம்பிரசாத், எடிட்டிங்ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ், கலைபாலசுப்ரமணியன், பாடல்கள்இளையராஜா

 

பழைய கதை பாணியில் ஆன்மீகம் கலந்த சஸ்பென்ஸ் டெக்னாலஜி வைத்து, புதையல், ஆராய்ச்சி, கோயில் எல்லாம் கலந்து ஒரு  சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுக்க முயற்ச்சித்த இயக்குனர் கிஷோர் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாயோன் மலை என்ற பகுதியில் ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. இந்திய தொல்லியல் துறை சார்பாக அந்த கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய குழு ஒன்று செல்கின்றது. கோவிலின் ரகசிய அறையில் புதையல் இருப்பது அந்தக் குழுவுக்கு தெரிய வருகிறது. அதைக் கைப்பற்ற கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது.

 

அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வரும் நாயகன் சிபி சத்யராஜ் சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடியுடன் கூட்டணி வைத்து கோவில் புதையல்களை வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள்.

 

அதே சமயம் இந்த கோவிலுக்குள் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், இரவில் கோவிலில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், இரவு வேளையில் அந்தக் கோவிலில் இருப்பவர்களுக்கு ஆபத்து எனவும் அந்த ஊர் மக்களிடையே நம்பிக்கை இருந்துவருகிறது.

 

இதனிடேயே சிலை கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வருகிறது. இச்சூழலில் தொல்லியல் குழு அந்த புதையலை எப்படி மீட்கிறார்கள், கொள்ளையர்கள் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே மாயோன் படத்தின் கதை.

 

கிருஷ்ணர் கோவில், மாயோன் மலை இவற்றை சுற்றி தான் படம் நகர்கிறது. இருந்தாலும் அதை மிக சுவாரஸ்யமாக, விறுவிறுப்புடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.

 

தொல்லியல் துறை அதிகாரியாக வரும் சிபிராஜ் ஓகே. கடைசி அவருடௌய கேரக்டருக்கு வரும் ட்விஸ்ட் ஷாக் ரகம்தான்.

கதாநாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன், முக்கிய கதாப்பாத்திரத்தில் ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிகுமார் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்..

 

படத்துக்கு ஆரம்பம் முதல் முடியும்வரை பலமாக இருப்பது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசைதான்.

அதேபோல  படத்திற்கு மற்றொரு பலம் கலை இயக்குனர்.. எது செட் கோயில்,  எது நிஜக் கோயில் என தெரியாத அளவுக்கு அசத்தி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் தன் பங்குக்கு மிரட்டி இருக்கிறார்.

 

மொத்தத்தில் மாயோன் ரொம்ப புதுசு.

 

 

 

மதிப்பீடு – 3/5

கோடங்கி விமர்சனம்

143 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன