வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

மாமனிதன் அழுத்தமானவன் –  கோடங்கி விமர்சனம்

மாமனிதன் அழுத்தமானவன் –  கோடங்கி விமர்சனம்

 

யதார்த்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி காயத்ரி, அனிகா, மானஸ்வி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமனிதன்.

ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் விஜய் சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசிக்கிறார். பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசைப்படுகிறார். அப்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். இதன் பின் விஜய் சேதுபதி ஆசை நிறைவேறியதா? மாமனிதனாக யாரை சொல்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய் சேதுபதி, அம்மாவாக காயத்ரி. இருவருமே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதியின் மகள்களாக வரும் அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

வழக்கம் போல கிராமத்து அழகியலை கவிதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கதை பலமாக இருந்தாலும் திரைக்கதை வேகமெடுக்காமல் செல்வதுதான் படத்தை பலவீனப்படுத்துகிறது.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் பரவாயில்லை ரகம்தான்.

இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம் போல அவருடைய யதார்த்தமான கிராமத்து அழகியலை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில் மாமனிதன் அழுத்தமானவன்.

 

 

 

மதிப்பீடு – 3/5

கோடங்கி விமர்சனம்

152 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன