செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

செக்ஸ் என்பதும் ஓர் உணர்வு, பேசத் தயங்க வேண்டிய விஷயமல்ல – வித்யாபாலன் அதிரடி

செக்ஸ் என்பது மனித உணர்வு. அது பேசத் தயங்கக்கூடிய விஷயம் அல்ல’ என்கிறார் அதிரடியாக.

‘‘திருமணம் என்ற அமைப்புக்குள்தான் செக்ஸ் இடம்பெற வேண்டும், அது இனப்பெருக்கத்துக்கானது என்பதே இந்திய கலாசாரமாக உள்ளது. அதுவே அந்தரங்க இன்பத்தைக் கெடுத்துவிடுகிறது’’ என்பது வித்யாவின் வாதம்.

அவரே தொடர்ந்து, ‘‘உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக நாம் இருந்தாலும், இன்னும் செக்ஸ் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குவது வேடிக்கையானது. செக்ஸ் என்பதற்கு நாம் போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது திருமண உறவில்தான் நடக்க வேண்டும், வாரிசுகளை உருவாக்க மட்டுமே தேவைப்படும் விஷயம் என்று எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வு தரும் இன்பம், அந்தரங்க நெருக்கத்தின் மகிழ்ச்சி, அதன் சுவாரசியம் எல்லாவற்றையும் தவறவிட்டுவிடுகிறோம்’’ என்று படபடவென்று விளாசுகிறார்.

செக்ஸ் பற்றிய நமது மனோபாவத்தை மாற்றிக்கொள்வதற்கான தருணம் இது என்றும் வித்யா வலியுறுத்துகிறார்.

‘‘பாலியல் விஷயத்தில், நவீனத்துக்கும் பழமைக்கும் இடையிலான ஒரு சமநிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். செக்ஸ் தொடர்பான பொய்யான பாசாங்குகளை விட்டொழிக்க வேண்டும். எல்லா உணர்வுகளையும் போல செக்ஸ் என்பதும் ஓர் உணர்வு, பேசத் தயங்க வேண்டிய விஷயமல்ல என்று நாம் நமது குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்’’ என்று குரலில் உறுதி தொனிக்கக் கூறுகிறார்.

வித்யா பாலனின் திரைவாழ்வைப் பொறுத்தவரை, இவர் நடிப்பில் ‘துமாரி சுலு’ படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அது பரவலாக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

‘சுலு’ என்ற சுலோச்சனா என்கிற மகிழ்ச்சியான, அதிர்ஷ்டசாலியான ஒரு நடுத்தர வயது இல்லத்தரசியைப் பிரதிபலிக்கும் விதமாய் நடித்திருந்தார், வித்யா. எளிமையான குடும்பப் பெண்மணியாக இருந்தாலும், சில அசாதாரண திறமைகளை வெளிப்படுத்துபவராகவும் அவர் தோன்றியிருக்கிறார். கணவர், குழந்தையுடன் எளிமையான வாழ்க்கை வாழும் பெண்ணாலும் அர்த்தமுள்ள அசாதாரண வாழ்க்கை வாழ முடியும் என்பதை, இந்த படத்தின் கதை உணர்த்துகிறது.

இப்படத்தின் பெருமைக்கெல்லாம் அதன் இயக்குநர் சுரேஷ் திரிவேணிதான் காரணம் என்று கூறும் வித்யா பாலன், இதுபோன்று மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களில் நடிப்பதே தனது ஆசை என்கிறார்.

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன