செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27
Shadow

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இறுதிச்சுற்றில் இவர் வடக்கு அயர்லாந்தின் மெக்னாலை வீழ்த்தினார்.

இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன