செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 13
Shadow

வைரலாகும் திருச்சிற்றம்பலம் டிரைலர்!

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அதன்படி, சாதாரண டெலிவரி பாயாக இருக்கும் தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் கதைகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன