
பழைய கிராமத்து உறவுகளின் கதைதான்… என்ன கொஞ்சம் கமர்சியல், காதல் கலாட்டா அடிதடிஆக்ஷன் மசாலா கலந்து கார்த்திக்காகவே எடுக்கப்பட்ட விருமன்.
சரி கதைக்கு வருவோம்…
முனியாண்டி கேரக்டரில் வரும் பிரகாஷ்ராஜ்-சரண்யாபொன்வண்ணன் தம்பதிக்கு விருமன் கேரக்டரில் வரும் ஹீரோ கார்த்தி உள்ளிட்ட 4 பிள்ளைகள். முனியாண்டி மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தனாம தொடர்பு வைத்ததை பார்த்த முனியான்டி மனைவி தீக்குளித்து சாகிறார்.
கண்முன் தாய் தீயில் கருகுவதை கண்டு தந்தை பிரகாஷ்ராஜ் மீது கடும் ஆத்திரம் கொள்ளும் விருமன் அவரை கொல்ல முயலும் நிலையில் தாய்மாமன் பேச்சை கேட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் வீட்டிலேயே வளர்கிறார்.
ஆனாலும் தந்தைக்கும் மகனுக்கு இடையே மோதல் ஓயவில்லை. எப்படியாவது விருமனை ஒழித்துக்கட்ட பிரகாஷ்ராஜ் முயல்கிறார்.
இதற்கிடையில் பிரகாஷ்ராஜின் மற்ற 3 மகன்களும் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறி விருமனுடன் வந்து சேர்கின்றனர்.
பிரகாஷ்ராஜை அவருடன் இருந்தவரே சொத்துக் காக கொல்ல திட்டமிடுகிறார். அதை விருமன் கார்த்தி அம்பலப்படுத்து கிறார்.
உறவுகள் எல்லாம் விட்டு விலகி தனி மரமாகும் பிரகாஷ்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்.
பிரிந்த உறவுகள் திரும்ப வந்ததா? விருமன் எடுத்த முடிவு என்ன ? என்பதற்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
நாகரீக மாற்றங்களுக்கு ஏற்ப குடும்பங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது. வீட்டுக்கு இரண்டு பிள்ளையாகி இப்போது ஒரு பிள்ளை போதும் என்றாகிவிட்டது. அத்தை, மாமன் அண்ணன், தங்கை என்ற உறவுகளே எதிர்காலத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில் உறவு முறைகள், சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகியிருக்கிறது விருமன்.
விருமன் கார்த்தி பெண்களுக்கு ஆதரவாக பேசி அவர்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரத்தில் இளைஞர்களையும், ரசிகர்களையும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் தக்கவைத்துக் கொள்கிறார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் புது வரவு. தேன்மொழி என்ற பாத்திரத்தில் அறிமுக மாகியிருக் கிறார்.
துறுதுறுவென பேசுவதும், கண்களாலும், புருவத்தாலும் பேசி ரசிகர்களை வசீகரிக்கிறார்.
கார்த்தியுடன் காதல் மொழி பேசுவதில் அசல் கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். பாவாடை தாவணியில் கிறங்கடிக்கிறார்.
ஊர் பஞ்சாயத்தில் கார்த்திக்கும் பிரகாஷ்ராஜிக்கும் பேச்சு முற்றி மோதலாகும் நிலையில் குறுக்கே புகுந்து கார்த்திக்கு லிப் டு லிப் கிஸ் அடித்து ஊர்வாயை அதிதி அடைப்பது கிக்கான ஷாக் அதிதிக்கு கோடம்பாக்கம் கண்டிப்பாக சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும்.
இதெல்லாம் இருந்தாலும் குத்தாட்டம் போடும் அளவுக்கு அழகிய நளின டான்ஸ் அதிதிக்கு வரவேயில்லை.
சூரி, சிங்கம் புலி, இந்தராஜா என காமெடிக்கும், மிடுக்கான தோற்றத்தில் ராஜ்கிரணும், கெத்து குறையாத வடிவுக்கரசியும் ரசிக்க வைக்கிறார்கள்.
ஆர்.கே.சுரேஷ் கார்த்தியுடன் மோதும் ஆர்.கே.சுரேஷ், எம் எல் ஏவாக வரும் ஜி.என்.சுந்தர் நடிப்பு தனி ரகம்.
தம்பிக்காக 2டி நிறுவனம் சார்பில் சூர்யா பெருசா நம்பி களமிறங்கிய படம்.
யுவன் இசையில்” கஞ்சா பூ கண்ணாலே.” பாடல் ரசிக்கும் ரகம்.
எஸ்.கே.செல்வகுமாரின் கேமிரா கிராமத்து பசுமையை கலர் மாறாமல் எடுத்து காட்டுகிறது.
குடும்ப உறவுகளின் அவசியத்தைஎப்படி சொன்னாலும் தகும்.
இயக்குனர் முத்தையா இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருந்தால் விருமன் எல்லா தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டிருப்பான்.
மொத்தத்தில் விருமன் மண் சார்ந்தவன்.
ரசிக்கப்படுவான்!!
கோடங்கி
மதிப்பீடு – 3.5/5
