ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1
Shadow

பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஆதிபுருஷ் பட டீசரில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அனுமன் குறித்த சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன