வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

சொகுசு கார் வரி ஏய்ப்பு வேலைக்காரன் பட வில்லன் கைது…!

நடிகர் நடிகைகள்  சொகுசு கார்களை  போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும் காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத் பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது  வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுவை போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்தநிலையில் மலையாள நடிகர் பகத் பாஷிலும் புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியை கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த வரி ஏய்ப்பு வழக்கில் நடிகர் பகத் பாசில் இன்று திருவனந்தபுரம்  குற்ற பிரிவில் ஆஜரானார். அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரனை நடைபெற்றது. அங்கு கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கபட்டார்.   பகத் பாசில் தனது  தவறை ஒப்பு கொண்டதாகவும்  அதற்குரிய அபராத தொகையை கட்டிவிடுவதாகவும் கூறி உள்ளதாக கேரள ஊடகங்கள் கூறி உள்ளன.
பகத் பாசில் பிரபல இயக்குனர் பாசிலின் மகன் ஆவார். சமீபத்தில் வெளியாகி ஓடிகொண்டு இருக்கும் வேலைக்காரன் படத்தில் இவர் வில்லனாக நடித்து உள்ளார்
282 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன