திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

உதய நிதியிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு சாதனைப் பெண்!

 

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, சென்னையில் .உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ், போல் வால்ட் விளையாட்டு போட்டியில் 8 வருடங்களாக இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள ரோசி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி அவர்களின் நிதி உதவியால் இதுவரையிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.

தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததை அடுத்து, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பில் M.செண்பகமூர்த்தி உடனிருந்தனர்.

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன