திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்” – கோடங்கி விமர்சனம்

 

பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்”

கோடங்கி விமர்சனம்

 

 

நண்பர்களிடம் பந்தயம் கட்டி விளையாட்டாக நாயகன் ஜையீத்கான்  செய்த ஒரு செயல் ஹீரோயின் சோனல் மோண்டோரியோவின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தனது கல்லூரி படிப்பையும், தனது லட்சியத்தை பாதியில் விட்டு விட்டு காசி பனாரஸில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு போய் விடுகிறார்.

செய்த்து தவறு என தெரிந்து தடுமாறும் ஹீரோ தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க ஹீரோயினை தேடி காசி பனாரஸ் செல்கிறார்.

 

அங்கு போனதும் ஹீரோயினை சந்தித்தாலும் மன்னிப்பை பெற முடியவில்லை இந்த சூழலில் ஹீரோவுக்கு திடீரென உளவியல் மாற்றங்கள் நடக்கிறது. டைம் லூப்பில் மாட்டிக் கொண்ட்து போல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கிறது.

இதில் இருந்து ஹீரோ தப்பித்தாரா? ஹீரோயின் மன்னித்தாரா? கடைசியில் என்ன ஆனது என்பதை மிக வித்தியாசமாக ரொம்ப புதுசா  கொடுத்திருக்கிறார் இயக்குனர். இறுதியில் என்ன நடந்தது என்பதை எதிர்பார்க்காத ட்விஸ்ட் மூலம் சொல்லியிருப்பது தான் ‘பனாரஸ்’.

 

நாயகன் ஜையீத்கான் வேகம், படபடவென பட்டாசாக நடிப்பை வெளிப்படுத்திதான் ஒரு புதுமுகம் என்பதை மறந்து நடித்திருக்கிறார்.

ஆரம்ப காட்சியில் ஹீரோயினை  பார்க்கும் போது தான் “டைம் டிராவலர் மூலம் எதிர்காலத்துக்கு சென்று வந்திருக்கிறேன், என்று கூறி நாயகியை நம்ப வைக்கும் காட்சியில் நம்மையும் நம்ப வைக்கிறார். மன்னிப்பை கேட்டு கெஞ்சு காட்சியிலும், ஆக்‌ஷன் காட்சியிலும் அட போட வைக்கிறார்.

 

ஹீரோயின் சோனல் மோண்டோரியோ பார்த்ததும் ஈர்க்க கூடிய வகையில் இருக்கிறார். அழுகை, சோகம், தவிப்பு, காதல் என பல முகங்களை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை தக்க வைக்கிறார்,

 

சாம்பு என்ற வேடத்தில் ஹீரோ நண்பராக நடித்திருக்கும் சுஜய் சாஸ்திரி, ஆரம்பத்தில் காமெடியனாக தெரிந்தாலும் சில இடங்களில் மனசை கனக்க வைக்கும் நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

.

 

நாயகியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் அச்யுத் குமார் ஒரு காட்சியில் அரை நிர்வணமாக அவரது பரிசோதனை கூடத்துக்கு வருகிறார், அப்போது அங்கே தொங்கிக் கொண்டிருந்த பூணூலை எடுத்து மாட்டிக் கொண்டு தனது கண்டு பிடிப்பை பற்றி பேசுகிறார். ஏன் பூணூலை மாட்டிக் கொண்டுத்தான் தான் பெரிய அறிவாளி என சொல்ல வேண்டுமா? அதை அணியாமலேயே சொல்லி இருந்தாலும் அந்த காட்சியில் பெரிய மாற்றம் வந்திருக்காது. இயக்குனர் இப்படிப்பட்ட காட்சியின் மூலம் தான்யார் என்பதையும் இந்த நாட்டில் ”இப்படிப்பட்டவர்கள்” தான் அறிவாளிகளாகவும் விஞ்சானியாகவும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லுகிறாரோ என்னவோ”!,

 

 

 

எப்போதும் மக்கள் கூட்டமாகவே இருக்கும் காசியை, கூட்டம் இல்லாத இடமாக காண்பித்திருப்பது  ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தியின் திறமைக்கு நல்ல சவால்.. வழக்கமாக காசியை காட்டும் படங்களில் கங்கை நதியை மட்டுமே காண்பித்து கடந்து போகும் சீனிமாக்களுக்கு மத்தியில் காசியின்  சாலைகளையும், சிறு சிறு தெருக்களையும் வளைத்து வளைத்து படம் பிடித்து அந்த கேமரா பின்னாடியே ரசிகர்களையும் அழைத்து சென்று அசத்தி இருக்கிறது அத்வைதா குருமூர்த்தியின் கேமரா.

 

அஜனீஷ் லோக்நாத் இசை,பின்னணி இசை கதைக்கு பரவாயில்லை ரகம். பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இசையமைப்பாளர் பேசப்பட்டிருப்பார்.

 

கே.எம்.பிரகாஷின் எடிட்டிங்கில் இன்னமும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை பல இடங்களில் மெதுவாக பயணிக்கிறது, டைம் லூப் காட்சிகளில் மிக வேகமாக புரியாமல் பிரேக் பிடிக்காத வண்டிபோல போகிறது. ஆனாலும் கடைசியில் சரியாக எங்கும் மோதாலம் நிற்பதால் எடிட்டருக்கு ஒரு சபாஷ்!

 

கதை எழுதி இயக்கியிருக்கும் ஜெயதீர்த்தா காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல நினைத்து “நூல்” இழையில் வெற்றியை தவற விட்டிருக்கிறார். என்றாலும் வசனங்கள் பல நறுக்கென உரைக்கிறது.

 

மொத்த்த்தில் பனாரஸ் பட்டுக்கு மட்டுமல்ல படம் எடுக்கவும் நல்ல ஊர் என்பதை சொல்லி தமிழ் ரசிகர்கள் மனசில் இடம் பிடித்து விடுகிறது.

பாலா படங்களில் அருவறுப்பான திகிலான காசியின் இன்னொரு யதார்த்த காசியை பார்ப்பதற்காகவே பனாரஸ் பார்க்கலாம்!

 

 

கோடங்கி

 

மதிப்பீடு – 3.5/5

 

119 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன