ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 15
Shadow

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன்!

 

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன் நடிகர் சாய் தீனா.

நடிகர் கமல் ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடிச்சு கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் தீனா.

அதன் பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடிச்சிருக்கார். எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

நடிப்பையும் தாண்டி தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்காய்ங்க. மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செஞ்சு வந்தார்.

வில்லன் என்பவன் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை தெறிக்கும்.

இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார்.

பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார் தீனா. அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன.

154 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன