வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

சினிமா ஆன வெற்றி சரித்திரம் பார்க்க வேண்டிய சித்திரம் – கோடங்கி விமர்சனம் 3/5

 

சினிமா ஆன வெற்றி சரித்திரம் பார்க்க வேண்டிய சித்திரம் – கோடங்கி விமர்சனம் 3/5

 

கன்னடத்தில் வாழ்க்கை தொடங்கி நாடு முழுதும் தன் தொழிலில் வெற்றி பெற்ற ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த்.

அச்சுதுறையில் இருக்கும் அப்பா வழியில் தொழில் செய்யாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேஸ்வரின் வாழ்க்கைக் கதை உண்மைக்கு மிக மிக நெருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது.

விஜய்சங்கேஸ்வரின் வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே வாழ்ந்திருக்கிறார்.

தொழில் போட்டியில் வீரனாகவும், குடும்பத்தில் நல்ல மகனாக, அப்பவாக, கணவராக பல பரிணாமங்களை நிஹால் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத்  நல்ல தேர்வு. அளவான நடிப்பில் அழகாக இருக்கிறார்.

ஆனந்த்நாக், பரத்போபண்ணா உள்ளிட்ட படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களைத் தேடித்தேடி எடுத்திருக்கிறார் இயக்குனர்

கீர்த்தன்பூஜாரியின் ஒளிப்பதிவில் அந்தக்காலகட்டம் அப்படியே கண்முன் தெரிவதும் பட்த்தின் வெற்றிக்கு பலம் சேர்க்கிறது. படம் முழுக்க ஒரே டோனில் படமாக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.

 

கோபிசுந்தரின் இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு கை கொடுக்கிறது.

 

குறிப்பாக ஆர்ட் அந்த கால சூழலை நினைவூட்டுவதால் அதிலும் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்,

 

பொதுவாக வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் ஒரு ஸ்டீரியோ டைப் விஷயங்களும், கமர்சியல் கலப்பும் இருக்காது… ஆனால் தன் வாழ்க்கை வரலாற்றை தானே ரசிக்கும் படி படமெடுக்க அனுமதித்த வீ ஆர் எல் குழும தலைவரே பாராட்டும்படி படமெடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷிகாசர்மா.

 

ஒரே ஒரு குறை பட்த்தை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தி இருக்கலாம். அதோடு கதா நாயகன் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

மற்றபடி வாழந்து கொண்டிருக்கும் பிரபல சாதனையாளரின் வாழ்க்கைக்கதையை அனைவரும் ரசிக்கும்படி குறிப்பாக அவரே ரசிக்கும்படி படமாக்கி நல்ல இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார் ரிஷிகாசர்மா.

 

கோடங்கி 3/5

 

132 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன