வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்! உடன்பால் கோடங்கி விமர்சனம்

 

சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்!

உடன்பால் கோடங்கி விமர்சனம்

 

லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, காயத்திரி, அபர்ணதி, சார்லி, மயில்சாமி உட்பட பலர் நடிப்பில் நேரடி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள படம் ”உடன்பால்”

எத்தனை பாச பந்தங்களும் பணத்துக்கு முன்னால் செல்லாக்காசு தான் என்பதை சொல்லும் விதமாக கார்த்திக் சீனிவாசன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

 

ஒரு உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு சோகத்தை மறந்து சிரிப்பை வரவழைக்கும் மந்திரம் சொல்கிறார் இயக்குனர். பல நேரங்களில் அந்த மந்திரம் பலித்து தியேட்டர் சிரிப்பலையில் குலுங்கும்.

 

படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை அத்தனை யதார்த்தமாக ரசனையுடன் படம் பார்க்கிறவர்களை ரசிக்க வைக்கிற இயக்குனர் இண்ட்ரவல் பிளாக்கில் ஒரு ஷாக் கொடுத்து முடிக்கிறார்…

இரண்டாம் பாதியும் அதே வேகத்தில் போகும் என நினைத்தால் சின்ன சின்ன சிரிப்புகளோடு பெரிய பெரிய லாஜிக் மீறல்களோடு கதை மெல்ல நகர்ந்து ஒருவழியாக முடிகிறது.

ஒரு சில குறைகளை தாண்டி, சில லாஜிக் அபத்தங்களை கடந்து பார்த்தால் உடன்பால் நிச்சயம் சொல்லப்பட வேண்டிய கதைதான்.

 

எந்திர மயமானமான வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் என உறவுகளை தூக்கி வீசும் நபர்களுக்கு செருப்படி கிளைமாக்ஸ்.

 

லிங்கா நல்ல குணச்சித்திர நடிகராக மிக பொறுத்தமாக இருக்கிறார். சோகத்திலும், சிரிப்பிலும் மிக தேர்ந்திருக்கிறார்.

 

விவேக் பிரசன்னா சமீபத்திய தமிழ் சினிமாவின் மறக்க முடியாத யதார்த்த முகம். சீரியசாக முகத்தை வைத்து சிரிப்பை வரவழைக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கு.

 

அழுமூஞ்சி காயத்திரி வழக்கம் போல அதகளப்படுத்துகிறார். அதிலும் பிணமான அப்பா சார்லிக்கு மேக்கப் போடும் காட்சிகள் அலப்பறையின் உச்சம்.

 

அபர்ணதி, மயில்சாமி தங்கள் பங்கை சரியாக செய்ய… சார்லி கூடுதல் கலவரம் செய்கிறார்.

ஒரு வீட்டுக்குள் பெரும்பாலான காட்சிகளை அத்தனை கச்சிதமாக படம் பிடித்து மதன் கிறிஸ்டோபர் தனக்கென ஹனி முத்திரை பதித்துக் கொள்கிறார்.

பட்த்தி பெரும்பகுதி பிணத்தை வைத்து பட்த்தை நகர்த்தும் போது சக்திபாலாஇயின் இசை ரொம்பவே ரசிக்க வைக்கிறது.

 

மொத்த்த்தில் உடன்பால் சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்!

 

கோடங்கி

மதிப்பு – 3/5

 

 

205 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன