சனிக்கிழமை, டிசம்பர் 9
Shadow

கற்ப்பழிப்பு குற்றவாளிகளை மிரள வைக்கிறதா வி 3? கோடங்கி விமர்சனம் 3/5

 

 

 

 

கற்ப்பழிப்பு குற்றவாளிகளை மிரள வைக்கிறதா வி 3? கோடங்கி விமர்சனம்

அமுதவாணன் இயக்கத்தில் டீம் எ வெஞ்சுரஸ்  தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ஆலன் செபாஸ்டியன். இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி, ஆடுகளம் நரேனுக்கு பாவனா, எஸ்தர் என்ற 2 மகள்கள்.

ஒரு நாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனா பலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கற்பழிக்கப்பட்ட பாவனாவிற்கு நீதி கேட்டு போராட்டம் வெடிக்கிறது. அதன் காரணமாக 5 இளைஞர்களைக் காவல்துறை சுட்டுக்கொல்கிறது. கொல்லப்பட்ட ஐவரின் உடல்களையும் உரியவர்களிடம் கொடுக்க காவல்துறை மறுக்கிறது. இதனால் மேலும் போராட்டம் அதிகரிக்க அவர்களையும்   காவல்துறை கடுமையாக தாக்குகிறது.

இந்த வழக்கு மனித உரிமை ஆணையத்திடம் கைமாறுகிறது.  மனித உரிமை அதிகாரியான வரலட்சுமி சரத்குமார், வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது. அவை என்ன? உடல்களை தர மறுக்கும் காரணம் என்ன? உண்மையில் நடந்தது என்ன? கடைசியில் நீதி கிடைத்ததா? என்பதே  “வி 3” படத்தின் கதை.

மனித உரிமை சிறப்பு அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வந்து குறைவான வசனங்கள் பேசி ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்தாலும் பார்வையாலும், மிடுக்கான நடிப்பாலும் கம்பிரமாக மிரட்டியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக பாவனா தனியாக ஸ்கோர் செய்கிறார். கனமான கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கும் பாவனா கவனிக்கப்படுகிறார். அவரின் தங்கையாக நடித்திருக்கும் எஸ்தர் அனில் சில கேள்விகளில் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்.

தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் கதாபாத்திரம் அனைவரையும் கண்கலங்க வைக்கும்.

பலாத்காரம், கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமையை மைய கருவாக எடுத்திர்ருந்தாலும் போலி என்கவுண்டர்கள், அரசியல்வாதிகளின் மற்றொரு குரூர முகம், அநீதி இழைக்கப்படும் பெண்களுக்கு நீதி என பல முக்கிய பிரச்சனைகளை இந்த படத்தில் ஆங்காங்கே பாலமாக சுட்டிக்காட்டி சபாஷ் வாங்குகிறார் இயக்குனர் அமுதவாணன்.

மொத்தத்தில் சொல்ல வேண்டிய கதை… பலரும் சொல்லத்தயங்கும் கதை. மனதை ரணமாக்கி தீர்வு தேட முயற்சிக்கும் யதார்த்தம்.

 

  • கோடங்கி

மதிப்பீடு 3/5

164 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன