வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

 

படிக்கிற காலத்துல வரலாற்று சம்பவங்களை புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எப்பவும் சினிமா தான்.

புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இப்படி எந்த கதையா இருந்தாலும் அதை அந்த கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரியான காட்சிகளை வைத்து மக்கள் மனசுல நச்சுன்னு இடம்பிடிக்கிறது சினிமாதான்.

சமீபத்துல வெளியான பொன்னியின் செல்வன் வெற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான்.

இன்னும் விளக்கமா சொல்லனும்னா த்ரிஷா பெயர் குந்தவையாகவும், ஐஷ்வர்யா ராய்யோட பெயர் நந்தினின்னும், விக்ரமோட பெயர் கரிகால சோழன்னும் , ஜெயம்ரவிய அருண்மொழி வர்மனாகவும் தான் மக்கள் மனசுல
பதிவாகியிருக்கு. அந்த அளவுக்கு வரவேற்பு, வசூல் பெற்ற படம், ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள்ல சோழர்கள் பெரும்பகுதியாகவும்,
பாண்டியர்கள ஒரு பகுதியாகவும் காட்டிருந்தாங்க. அதுவும் நெகட்டிவ் ரோலாதான் தான் காட்டுவாங்க.

ஆனால் “யாத்திசை” படத்துல பாத்தீங்கன்னா முழு படமும் பாண்டியர்கள மையமா வெச்சு எடுத்திருக்காங்க.

இந்த யாத்திசை படத்துல எல்லாமே அறிமுக நட்சத்திரங்கள் தான். இன்னும் சொல்லனுன்னா இந்த படத்தோட இயக்குநர் தரணி ராஜசேந்திரன்னும் அறிமுக இயக்குனர் தான்.

. சரி இப்ப கதைக்கு வருவோம்….

யாத்திசை என்றால் தென்திசை என்று பொருள். 7ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் தென்திசையான பாண்டிய நாட்டுக்கு எதிரா போராடிய எயினர் எனும்
தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’.

இந்த கதையில் உள்ள பெயர்கள், யாத்திசை என்ற கதையின் தலைப்பை மட்டும் வைத்து கொண்டு தனது முழு
கற்பனையை செதுக்கியிருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.

படத்தின் கதையை பொறுத்தமட்டில் இரணதீரன் என்ற பாண்டிய மன்னன் தனது ஆட்சிக்காலத்துல
எயினர் சமூக மக்கள பாலை நிலத்துக்கு போகச் சொல்லி உத்தரவு போடுறாரு.

இதனால் எயினர் சமூக மக்கள் கடுமையான கோபத்துல இருக்காங்க. எயினர்
சமூகத்தின் தலைவன் கொதி, பாண்டியர்கள் மீது போர்தொடுக்க முடிவு செய்றாரு அதற்காக சேரர்கள், சோழர்கள், பல்லவர்களுக்கு அழைப்பு விடுகிறாரு.
இதற்கிடையில தேவரடியார்கள காட்டுறாங்க அவுங்கள பாண்டியர்கள் ஆளும் பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு போக சொல்லுறாங்க எயினர்கள். இந்த
தேவரடியார்கள் எங்கே சென்றார்கள், பாண்டியர்களுக்கும், எயினர்களுக்கும் போர் நடந்ததா, கடைசியில் யார் வென்றது என்பது தான் படத்தின் மீதி கதை.

வரலாற்றுப் படங்களில் மன்னர்களாக வரும் நட்சத்திரங்களைக் காண்பிக்கும் போது ஒரு அரைமணி நேரம் Slow Motion -ல் படு பயங்கரமான பிஜிஎம் போட்டு Intro கொடுத்து பாதி படத்தை ஓட்டுவாங்க.

ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. ரொம்ப Simple-லா காட்டுகிறார்கள். கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மொழிக்குப் பெரிதும் மெனக்கீடு செய்திருக்கிறார்கள். எயினர்களின் மொழிக்கு 7-ம் நூற்றாண்டு இலக்கியங்களை ஆய்வு செய்து அதைத் தொகுத்து உரையாடலாக மாற்றியிருக்கிறார்கள்.

அந்தக் காட்சிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் சப்டைட்டிலும் போட்டுள்ளார்கள். இப்படி மொழி, உடை, நகைகள் என அந்த காலத்தில் மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தத்ரூபமாகக் காட்டி இருக்கிறார்கள். இதனால் திரையரங்கில் பார்வையாளர்களை யாத்திசை படம் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்லும் அனுபவம் கிடைக்கும்.

குறைவான பட்ஜெட்ல கூட வரலாற்றுப் படங்களை அருமையா எடுக்க முடியுமென நிரூபித்துள்ளார் இயக்குனர் தரணி.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தமிழ் இனம், மொழி, மன்னர்கள், போர், அதிகாரம், ஒடுக்குமுறை, சடங்குகள், பலி-ன்னு பல வரலாற்று விஷயங்களை இலக்கியத் தரத்தோடு நேர்த்தியான Periodic Action திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

பிரபல நடிகர்கள், நடிகைகள் நடித்தால் தான் வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும் என்ற நிலைமையை மாற்றி புதுமுகங்களாலும் பல அடிகள் பாய்ச்சல் Words முடியும்-ன்னு ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் இயக்குனர் தரணி.

மிக யதார்த்தமான சூழலை மிக நேர்த்தியாக சொல்லும் யாத்திசை உலகம் முழுசும் தமிழர்கள் வரலாற்றை பறை சாற்றும் மாபெரும் சான்று… இதை காட்சிப்படுத்திய குழுவுக்கு பாராட்டுக்கள், விருதுகள் தவிர்க்க முடியாதவை.

நடித்த ஷக்தி மித்ரன் – ரணதீர பாண்டியன்
சேயோன் – கொதி ( எயினர் தலைவன்)
ராஜலட்சுமி – தேவரடியார்
குரு சோமசுந்தரம் – எயின பூசாரி
சுபத்ரா – பெரும்பள்ளி தலைவி
சமர் – துடி ( எயின போர் வீரன் )
வைதேகி அமர்நாத் – தேவரடியார் என அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர்.

கலை இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் சிறப்பு பராட்டு.

யாத்திசை… போகும் எத்திசையிலும் வெற்றி முரசு கொட்டும்.

– கோடங்கி

மதிப்பீடு – 4/5

213 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன