புதன்கிழமை, மே 20
Shadow

சாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்!

 

சாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்!

துபாயில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திட்டக்குடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் இராவண கோட்டம்.

இதில் சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி, இளவரசு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் துபாயில் பிரமாண்டமாக நடை பெற்றது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், படத்தின் டிரைலர் காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 12ம் தேதி உலகம் முழுவதும் இராவணகோட்டம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமனாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் நிலவி வரும் மக்கள் சந்திக்கும் சிக்கலை இந்த படம் பேசி உள்ளதாக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமார் “மத யானை கூட்டம்” என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அனைவர் பார்வையையும் தன் பக்கம் இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைக்கதை மன்னனின் மகனாக இருந்தாலும் பிரேக் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சாந்தனு இந்த படத்திற்காக கடுமையாக தன் உழைப்பை போட்டிருக்கிறார். அதற்கு பலன் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

– கோடங்கி

247 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன