புதன்கிழமை, மே 15
Shadow

எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

 

எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” சினிமா ஆட்டம் ஜெயிக்குமா?

 

  • கோடங்கி விமர்சனம் 2.5/5

 

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் அதுவும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்துள்ளார்.

அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்

யோகிபாபு, நதியா, ஆர்.ஜே.விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

கதை ரொம்ப சின்னது…

”ஹரிஷ் கல்யாணும் இவானாவும் இரண்டு வருட அக்ரிமெண்ட் போட்டு பழகிய பின்னர் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமண நடக்கவேண்டும் என கோயில் குளமாக சுற்றிவருகிறார் சிங்கிள் மதரான அவரது அம்மா நதியா. இறுதியாக ஹரிஷ் கல்யாண், இவானா காதல் இருவீட்டாருக்கும் தெரியவர அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு எடுக்கின்றனர். ஆனால், இவானா போடும் திடீர் கண்டிஷனால் திருமணம் வேண்டாம் என அவரை விலகிச் செல்கிறார் ஹரிஷ் கல்யாண். ஆனால், மீண்டும் இவானா திருமணத்துக்கு ஓக்கே சொல்ல, அதற்கு முன்பாக இரு குடும்பத்தாரும் கூர்க் பகுதிக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த சுற்றுலா எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என நதியாவுக்கு தெரியவர, அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை”.

எல்ஜிஎம் படத்தின் ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. ஆனால் இந்த படத்தின் பிரச்சனை என்னவென்றால் சுவாரஸ்யமில்லா திரைக்கதை, படத்தின் நீளம், ஒட்டாத காட்சிகள் அதுமட்டுமின்றி ஹரிஷ் – இவானா காதல் மற்றும் இவானா – நதியா இடையேயான உறவு ஆகியவை சுத்தமாக எடுபடாமல் டக் அவுட் ஆகி நிற்கிறது.

படத்தில் பல இடங்களில் ஹரிஷ் கல்யாண் தனது காதல் கதையை எல்லோரிடமும் சொல்லி மொக்கை வாங்குவார். அப்போது வரும் “இதெல்லாம் ஒரு கதையா” என்ற டயலாக் எல்ஜிஎம் படத்துக்காக இயக்குநரே எழுதிக் கொண்டதாக தெரிகிறது.

சிங்கிள் மதர், மாமியார் – மருமகள் உறவு என வலிமையான கதைக்கரு இருந்தும், அடித்து ஆட முடியாமல் நெட் பிராக்டீஸ் செய்த திருப்திதான் கிடைக்கிறது.

லவ் டுடேவில் பார்த்த்தை விட இவானா நல்ல அழகு… காதல் காட்சிகளில் கலர்புல்லாக இருக்கிறார்.

நல்ல நடிகை நதியா அவரை சரியாக பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறார் இயக்குனர்.

ஹரிஷ் கல்யாண் ஹெலிகாப்டர் ஷாட் என  எவ்ளோ முயற்சித்து அடித்து ஆடியும் சிங்கிள் ரன் எடுப்பதற்குள் மேல்மூச்சு கீழ் முச்சு வாங்கி விடுகிறது. கதை கேட்பதிலும், நடிப்பதிலும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரே ஆறுதல் யோகிபாபு, ஆர்ஜே விஜய் இவர்களின் சில காட்சிகள் தான் ரசிகர்களை கொஞ்சம் சமாளிக்கிறது.

இயக்குனர் காட்சிகளில், விளம்பரங்களில் செலுத்திய கவனத்தை திரைக்கதையில் செலுத்தி இருக்க வேண்டும். இசையும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

தோனியின் தயாரிப்பு என்பதால் எல்ஜிஎம் டி20 போல சரவெடியாக தொடங்கி முடியும் என எதிர்பார்த்து போனால் டெஸ்ட் மேட்ச் பாக்குற திருப்தி கூட இல்லாத்து ரொம்ப ஏமாற்றம்தான்.

மொத்தத்தில் பட ரிலீசுக்கு முன்னாடி இருந்த எதிர்பார்ப்பு படி முதல் படம் ரிலீஸ் ஆனதும் ஹெலிகாப்டர் ஷாட் போல அடிச்சி மேல போச்சி… பட் கடைசியில பார்டர் லைன்ல எட்டிப் புடிச்சதால… பர்ஸ்ட் பால்ல டக் அவுட் ஆகி இருக்கு எல்ஜிஎம்!

 

– கோடங்கி

2.5/5

242 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன