
ரஜினி – நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் – கோடங்கி விமர்சனம் 3.5/5
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர்.
மிக நேர்மையான துணிச்சலான ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று
தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த் ரவி மருமகள் மிர்னா மற்றும் பேரன் ரித்திக் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார ரஜினிகாந்த். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரவியை அந்த கும்பல் கொலை செய்து விட்டதாக சொல்கிறார்கள். நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி கலங்கும் ரஜினி அந்த ரவுடி கும்பலை வெறித்தனமாக தேடித் தேடி பழி தீர்ப்பது தான் படத்தின் கதை.
கதை என்னமோ பழைய உருட்டாக இருந்தாலும் மேக்கிங்கில் வித்தியாசம் காட்ட முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
ரொம்ப அலட்டிக்காம தன் ஆர்ப்பாட்ட அலப்பறையை கட்டவிழ்த்து விட்டு தன் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார் ரஜினி.
குறிப்பாக ஜெயிலர் ஆக வரும் பிளாஷ்பேக் காட்சியில் சம்பவம் செய்து இருக்கிறார் ரஜினி.
ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ், சுனில் என பிரபலங்களும் சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் தரமாக வந்து போகிறார்கள்.

சுனில் காட்சிகளில் சில இடத்தில் கத்திரி போட்டிருந்தால் திரைக்கதை இன்னும் வேகம் எடுத்திருக்கும்.
யோகிபாபுவை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்
வசந்த் ரவி இன்னும் முயற்சிக்க வேண்டும்.
ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஆடிப்போகிறார்.
ஒரு சில டயலாக்கில் ரம்யா கிருஷ்ணன் ரோல் முடிகிறது.
எல்லாவற்றையும் விட வில்லனாக நடித்த வினாயக் கதாபாத்திரம் மிக கொடுரமானது. தமிழ் சினிமாவில் இன்னும் பலமாக வினாயக் கால் பதிப்பார்.
முழுபடத்தையும் உயிரோட்டமாக கொண்டு போகும் அனிரூத் இசை மிக பலம் படத்துக்கு…
ஒட்டுமொத்தமாக ஜெயிலர் நெல்சனை ஜெயிக்க வைத்திருக்கிறது. ரஜினியை ரசிக்க வைத்திருக்கிறது.
– கோடங்கி
3.5/5
