திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

”பரம்பொருள்” சரத்துக்கு கை கொடுக்குமா? கோடங்கி பார்வை 2.5/5

 

 

”பரம்பொருள்” சரத்துக்கு கை கொடுக்குமா? கோடங்கி பார்வை 2.5/5

 

கவி கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் பரம்பொருள். இதில் சரத்குமார், அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பர்தேஷி ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது.

சிலை கடத்தலை மையமாக வைத்து சமீபகாலமாக நிறைய படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பரம்பொருள் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இயக்குனர் இதில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்

சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அமிதாஷ் ஆதி என்ற கதாபாத்திரத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வருகிறார். அப்படிதான் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமாரின் வீட்டில் திருடும்போது கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார்.

அப்போது அமிதாஷாவிடம் சரத்குமார் விசாரணை செய்யும்போது சிலை கடத்தல் குற்றவாளி ஒருவரிடம் இவர் வேலை செய்தது தெரிய வருகிறது. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் மிகச் சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் அமிதாஷ் பற்றி தெரிந்தவுடன் ஒரு பழம்பெரும் சிலையை கடத்தி விற்க வேண்டும் என்று சரத்குமார் கூறுகிறார். அதற்கு ஆரம்பத்தில் அமிதாஷ் மறுத்தாலும் குடும்ப சூழ்நிலை மற்றும் சரத்குமார் கட்டாயத்தின் பேரில் இதை செய்ய முயற்சிக்கிறார். கடைசியில் அந்த சிலையை எப்படி கடத்துகிறார்களா? மாட்டிக் கொண்டார்களா? என்பது தான் படத்தின் கதை.

மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை இயக்குனர் வைத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பரவாயில்லை. மொத்தத்தில் சரத்குமாருக்கு போர் தொழில் அளவுக்கு பரம்பொருள் அமையுமா என்பது சந்தேகம் தான்.

 

கோடங்கி – 2.5/5

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன