
*கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.*
சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்து உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் *கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே *ட்ரெயின் (Train)* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.*டிம்பிள் ஹயாதி* அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
இப்படத்தில் *ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா* மற்றும் பலர் நடிக்கிறார்கள் .
தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் *மிஷ்கின்* இப்படத்திற்கும் இசையமைக்கிறார். *பௌசியா பாத்திமா* ஒளிப்பதிவு செய்ய, *ஸ்ரீவத்சன்* படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை *V.மாயபாண்டி* மேற்கொள்கிறார்.
*ட்ரெயின் (Train)* படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அண்புச்செழியன் ,
கல்யாணம் (Knack Studios)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
*நடிகர்கள்:*
விஜய் சேதுபதி
டிம்பிள் ஹயாதி
ஈரா தயானந்த்
நாசர்
வினய் ராய்
பாவனா
சம்பத் ராஜ்
பப்லு பிருத்விராஜ்
கே.எஸ்.ரவிக்குமார்*
செல்வா சந்திரசேகர்
யூகி சேது
கணேஷ் வெங்கட்ராமன்
கனிஹா
தியா சீதிபள்ளி
சிங்கம் புலி
ஸ்ரீரஞ்சனி
அஜய் ரத்னம்
திரிகுன் அருண்
ராச்சல் ரபேக்கா
