
அன்னபூரணி – திரைப்பட விமர்சனம் 3/5
ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நயன்தாராவுக்கு பெரிய சமையல்கலைஞராக வேண்டும் என்பதுதான் ஆசை.பெண்கள் சமையல்கட்டை விட்டு வெளியே வரப் போராடும் கதைகள் பார்த்திருக்கிறோம்.இங்கோ சமையல் கலைஞராவதற்கே போராடவேண்டியிருக்கிறது. அது ஏன்? என்பதற்கான விடையாக வந்திருக்கிறது அன்னப்பூரணி படம்.
அன்பான அமைதியான நயன்தாரா. அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்.அசைவம் சாப்பிடவே எதிர்ப்பு சமைப்பதென்றால்?கடும் எதிர்ப்பு,அதை மீறி சமையல் கலை படித்து சமைக்கப்போனால் அங்கும் சிக்கல்கள். அவற்றை எதிர்கொள்கிறார்.
நயன்தாராவின் நலன்விரும்பும் தோழன் கதாபாத்திரம் நாயகன் ஜெய்க்கு. அதையும் கம்பீரமாகச் செய்திருக்கிறார்.
பிரபல சமையல்கலை நிபுணராக நடித்திருக்கிறார் சத்யராஜ். சமையலின் மகத்துவத்தைப் பேசுவதற்காக இருக்கிறார் கே.எஸ்.இரவிக்குமார், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத்குமார், தன் தேர்ந்த நடிப்பால் அந்த வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக வருகிறார் கார்த்திக்குமார். சுரேஷ்சக்ரவர்த்தி ரெடின்கிங்ஸ்லி உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் சத்யன்சூரியன் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.
தமன் இசையில் பாடல்கள், பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
உணவு உண்பது அவரவர் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப நடக்கும் ஒரு செயல். தற்காலத்தில் அதற்கும் பல கட்டுப்பாடுகள். அவற்றிற்கான எதிர்வினையாக இருக்கிறது இயக்குநர் நிலேஷ்கிருஷ்ணா முயற்சி.
ஒட்டுமொத்தமாக நாடு இப்ப இருக்கும் நிலையில் அன்னப்பூரணி இப்ப சொல்ல வேண்டிய கதைதான்!
மதிப்பீடு 3/5
