செவ்வாய்க்கிழமை, மே 26
Shadow

திமுக அரசு மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் ஏன் ஆருத்ரா மோசடி, பாஜக அண்ணாமலை குறித்து வாய் திறக்கவில்லை – திமுக ஐடி விங் கேள்வி?

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ஒரு பதிவை தனது x பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது ஆம்ஸ்ராங் மீதான அவரது அன்போ, அல்லது அவரது கொலைக்கு காரணங்களை அறியவேண்டும் என்கிற நோக்கமோ இல்லை. மாறாக ஆளும் திமுக அரசை பழிசொல்ல வேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது.

தனது பதிவில் ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை அடுக்கும் ரஞ்சித்திற்கு சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம் என திமுக ஐடி விங் கேள்வி?

*ஆம்ஸ்ராங் கொலையில் குற்றவாளிகள் சண்டைந்ததும், அவர்கள் சொல்லும் காரணங்கள் சரியாக பொருந்திவருவதும் உங்களுக்குப் புலப்படவில்லையா..? அதை மறுத்து வேறு குற்றவாளிகளை ஏன் தேடுகிறீர்கள்…?

*அப்படி உங்களுக்கு உண்மையான குற்றவாளிகள் என்று யாரையாவது தெரியும் எனில் அவர்களை, போலீசிடமோ, அல்லுத பொதுவெளியிலோ சொல்லாமல். பொத்தாம் பொதுவாக எப்படி போலீசின் விசாரணையை சந்தேகிக்கீரீர்கள்?

*ஆர்க்காடு சுரேஷ், புன்னை பால இருவரும் தலித்துகள்தானே..? ஒரு தலித் தலைவர் என்று கொல்லப்பட்ட ஆம்ஸ்ராங்கிற்கு சாதிபார்த்து உறவாடத்தெரிந்த ரஞ்சித்திற்கு கொலையாளிகளின் சாதி எப்படிதெரியாமல் போனது..? அல்லது அது தெரிந்ததால்தான் மறைத்தீர்களா..? அல்லது வேறு குற்றவாளிகளைத் தேடுகிறீர்களா..?

*திருநின்றவூர் பாஜக பட்டியலிதன் தலைவராக பொருப்பில் இருக்கும் செல்வராஜ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரைக் குறித்தோ, பாஜக வைச்சேர்ந்த அஞ்சலையைக் குறித்தோ, ஏன் பாஜக என்ற மூன்று எழுத்துக்களையோ கூட உங்கள் பதிவில் குறிப்பிடாதது ஏன்..?

ஆம்ஸ்ராங்கின் கொலைக்குப் பின்னணியில் ஆருத்ரா மோசடி இருக்கிற செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த நிறுவனம் குறித்து, அதற்கு ஆதரவாக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலையும் இருப்பதை ஏன் குறிப்பிட முடியவில்லை. பாஜகவின் ரவுடியிசத்தையோ, ஆம்ஸ்ராங்கொலையில் அதன் பங்களிப்பையோ குறிப்பிட உங்களை எது தடுக்கிறது..?

*ஆம்ஸ்ராங் அவர்களின் கூடவே இருந்தேன் என்கிறீர்கள்… ஏன் அவரின் மறுபக்கத்தைக் குறித்து ஒரு வார்த்தை கூட உங்களால் பேசமுடியவில்லை.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை உங்களால் ஏன் கணிக்க முடியவில்லை..?

*அவர் தன் கையில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கி வைத்திருந்தாரே அதை ஏன் மறைக்கிறீர்கள்.

*காவர்த்துறை தரப்பிலிருந்து பாதுகாப்பு வழங்குவதா சொன்ன பின்னும் அதை ஆம்ஸ்ராங் மறுத்திருக்கிறாரே அதை ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை.

*தென்னரசு யார்..? பாம் சரவணன் யார்..? மாதவன் ஏன் கொல்லப்பட்டார்..? சண்டையிடும் ரவுடிகளுக்கு மத்தியில் சாதியைத் தேடுவது அபத்தமானதுதான் இருந்தாலும் பட்டியலின மக்களின் ஏக பிரதிநிதியாக கருதிக்கொண்டு போலியாக அறச்சீற்றம் கொள்ளும் ரஞ்சித்திடம் இதை கேட்கத்தானே வேண்டும்..?

*இத்தனைக்க கேள்விகளுகுள்ளும் பாஜக, ஆருத்ரா, ரவுடியிசம் என எல்லாமும் இருக்கிறது இதைப்பற்றியெல்லாம் துளியும் கேள்வி எழுப்பாமல் பிரச்சனையை திசைதிருப்பி அரசின் மீது மட்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கிரீகளே ரஞ்சித் இது உண்மையேகவே தலித்மக்களின் மேம்பாட்டிற்கு உதவுமா என்பதுதான்  இறுதிக் கேள்வி என்கிறது திமுக ஐடி விங் !?

ஆமா… இப்படியும் பல கேள்விகளை சந்தேகங்களை பா.ரஞ்சித் எழுப்பி இருக்கனும் இல்ல என யோசிக்க வைக்கிறது திமுக ஐடி விங்!

228 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன