திங்கட்கிழமை, ஏப்ரல் 28
Shadow

பி.எஸ்.பி. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன் தேர்வு! யார் இந்த ஆனந்தன்?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன்

யார் இந்த ஆனந்தன்?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. 1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர்.

அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்.

முக்கியமான வழக்குகளில் ஆஜரானவர்: சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தியவர் பி.ஆனந்தன். தற்போது 26 ஆம் ஆண்டாக தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

சுயமரியாதை திருமணம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்றவர். வழக்கறிஞர் ஆனந்தன். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்தும் அவரை விடுவித்தவர்.

ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் தங்கி படிக்க இலவசமாக இடமும் உணவும் வழங்கி வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று சட்ட விளக்கம் அளிப்பவராக இருந்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் மறைந்த மாநில தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் அவர்களுடன் 2006 முதல் இணைந்து தொடர்ந்து பணியாற்றியவர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு 10 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

132 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன