
”தீரா சாதனை,ஆறா ரணம்” மீண்டும் மோதிய அஜீத்-விஜய்?
தமிழ் சினிமாவில் அஜீத்-விஜய் இருவரின் தகவல்கள் என்ன வந்தாலும் அவை பெரும் பரபரப்பாக பெசப்படும். ஒவ்வொரு முறையும் இவர்களின் படங்களின் ரிலீஸ் நேரத்தில் இந்த பரபரப்பு ரசிகர்களின் கடும் வார்த்தை மோதல்களில் சமூக வலைதளப்பக்கங்கள் அனலை கக்கியப்படியே இருப்பது வழக்கம்.
விஜய் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டால் அஜீத் தரப்பில் ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைக்கும்.
இந்த முறையும் விஜய் நடிக்கிற கோட் படத்தில் இருந்து 3வது சிங்கிள் லிரிக்கல் பாடல் ஒன்று இன்று வெளியாகும் என நேற்றே அறிவிப்பு வெளியாகி இருந்த்து.
விஜய் ரசிகர்களும் 3வது சிங்கிள் படலுக்காக மிக ஆர்வமாக காத்து இருந்தனர்.
இந்த சூழலில் அஜீத் ரசிகர்களும் வழக்கம் போல இன்றும் தல தரப்பில் ஏதாவது ஒரு அறிவிப்பு வரும் என தங்கள் பங்குக்கு காத்திருந்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்-அஜீத் தரப்பில் இருந்து ஒரு பாடலும், ஒரு அறிவிப்பும் வர இணையம் மீண்டும் சூடாகிப்போய் உள்ளது.
அதிலும் குறிப்பாக அஜீத் வெளியிட்ட அறிவிப்பில் “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்… யாவையும் எதிர் கொண்டு வெல்லும் விடா முயற்சி” என குறிப்பிட்டதுதான் இப்போதைக்கு ஹாட் டாப்பிக்காக பகிரப்பட்டு வருகிறது.
விஜய் கோட் பட்த்தின் 3வது சிங்கிள் படலை கங்கை அமரன் எழுதி இருக்கிறார். மெலோடியான காதல் பாடல் பெரிய அளவில் ஆட்டம் போட வைக்காமல் மிக மென்மையாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
வழக்கமாக விஜய் பாடல் வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை தாண்டும். ஆனால் இந்த 3வது சிங்கிள் பாடல் ஏனோ மெதுவாக நகர்கிறது.
எது எப்படியோ இணையத்தில் மீண்டும் அஜீத்-விஜய் ரசிகர்கள் தங்கள் பலத்தை காட்டி வருகிறார்கள்.
