ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

அதிகரிக்கும் “அந்தகன்” காட்சிகள்…வசூலில் சொல்லி அடித்த தியாகராஜன் 🔥

 

அதிகரிக்கும் “அந்தகன்” காட்சிகள்…வசூலில் சொல்லி அடித்த தியாகராஜன் 🔥

 

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.

ரீமேக் படங்கள் பெரும்பாலும் சொதப்பலாக அமையும், ஆனால் அந்தகன் படத்தை நேர்த்தியாக ரீமேக் செய்து டாப் ஸ்டார்  பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாக கொடுத்திருக்கிறார் அவரது தந்தை தியாகராஜன்.

இப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுதும் அந்தகன் ரிலீஸ் ஆனது. இந்த பட அறிவிப்பு வந்த போதே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்ப்படுத்தி இருந்தது. படம் ரிலீஸ் ஆனதும் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அந்தகன் பெற்றுள்ளது.

இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்தகன் படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 2.1 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ. 65 லட்சம் வசூல் செய்திருந்த அந்தகன் படம், இரண்டு நாட்களில் இரண்டு மடங்கு வசூல் அதிகரித்துள்ளது. வசூல் அதிகரிப்பைப் போலவே திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிப்பு, ரசிகர்களின் வரவேற்ப்பு, வசூல் அதிகரிப்பு காரணமாக தியாகராஜனும், பிரசாந்த்தும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸ் டாப் ஸ்டார் பிரசாந்த்துக்கு டாப் கியரில் தொடங்கி இருப்பது பிரபலமான இயக்குனர்களின் கவனம் முழுதும் பிரசாந்த் பக்கமாக  திரும்பி இருக்கிறது குறிப்பிட்தக்கது.

 

390 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன