
சைதாப்பேட்டை நீதிமன்றம் நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரன்ட் !
கடந்த 2012 ஆண்டு, நித்யானந்தா – நடிகை ரஞ்சிதா ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பாக நக்கீரன் தரப்பும், அந்த வீடியோவை எடுத்து வைத்திருந்த நித்யானநத்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலரும், நித்யானந்தாவை பணம் கேட்டு மிரட்டினர். அவர்களுடனான பேச்சு வார்த்தை, சென்னை தியாகராய நகரில் ஒரு விடுதியில் நடந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட கை கலப்பில், நித்யானந்தா தரப்பில் பலருக்கு காயம் ஏற்பட்டதாக சவுந்திரப்பாண்டியன் நகர் ( பான்டி பஜார்) காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
பிறகு இந்த வழக்கு CBCID போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. CBCID போலீஸ் விசாரணை முடிவில், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா தொடர்பான செய்திகளை நக்கீரனில் வெளியிட்ட போது, கோடிக்கணக்கான பணம் கேட்டு மிரட்டியதாக நக்கீரன் கோபால் உள்ளிட்ட எட்டு பேர்கள் மீது சிபிசிஐடி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நக்கீரன் கோபாலுக்கு, இன்று சைதாப்பேட்டை கோர்ட் பிடிவாரண்ட் போட்டுள்ளது…
