வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின் நடிக்கும் ”Test”

 

உலகின் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மூன்று மனிதர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட்டில் ஒன்றிணையும் போது, அது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய கட்டாயத்தைத் தூண்டுகிறது.

Test படத்தைப் பற்றி படக்குழு: “வாழ்க்கை ஒரு விளையாட்டு! வாழ்க்கைப் பயணம் என்றால் என்ன ..? வழியில் அவை சந்திக்கும் சவால்கள் என்னென்னவென்பதை, ஒரு விளையாட்டின் மூலமாக கண்ணாடி போல் பிரதிபலிப்பதே Test படத்தின் கதை. திரைத்துறையில் பெரு மதிப்புடன் போற்றப்படும் நடிகர்களான ஆர். மாதவன், நயன் தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் தங்களது நடிப்பை மிகவும் ஆழமாகவும் உணர்ச்சியோடும் வெளிப்படுத்தி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும் இது மாதிரி ஒரு நடிப்பு கூட்டணி வேறு எந்த படத்திலும் அமையவில்லை. Test படத்தில் காதல், கனவு, இலட்சியம்,விருப்பம் மற்றும் கிரிக்கெட் என அனைத்தும் கலந்த கதையாக வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் மனதையும் தாக்கும். மிகவும் பவர்ஃபுல் தீம் கொண்ட Test படத்தினை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், Netflix உடன் இணைந்து வழங்குவதில் பெருமை அடைகிறோம்.

இயக்கம்: S.சசிகாந்த், கதை: S. சசிகாந்த். தயாரிப்பு: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & S. சசிகாந்த் (A YNOT Studios Production) நடிகர்கள்: R.மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின்

194 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன