ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5

 

சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5

 

 

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் ”சப்தம்”.

மூணார் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் நூலகத்தில் அடுத்தடுத்து சில மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த தற்கொலைகள் எதனால் நடைபெறுகிறது என்பதை விசாரிக்க பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான ஆதி அங்கு வருகிறார். இறந்து போன மாணவர்களின் உடலை பார்க்கும்போது கை, கால், முகம் அனைத்தும் கோணல்மாணலாகவும் உடலில் சைத்தானின் குறியீடு போன்ற ஒன்று இருப்பதையும் பார்க்கிறார் ஆதி.

அதோடு அந்த நூலகம் பல வருடங்களுக்கு முன்பு தேவாலயமாக இருந்ததையும் கண்டுபிடிக்கிறார் ஆதி.

தேவாலயம் எப்படி அமானுஷ்யங்களின் கூடாரமாக மாறியது.??  தேவாலயத்திற்குள் இருக்கும் அமானுஷ்யங்கள் யார்.?? மாணவர்கள் எதற்காக இறந்து போகிறார்கள்.??? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது இரண்டாம் பாதி.

கதைநாயகனாக நடித்த ஆதியின் உழைப்பு மெனக்கெடுதல் எப்போதும் போல இதிலும் சூப்பர். ஆனாலும் ஒரே மாதிரியான பாடி லாங்வெஜ் என்னமோ பல நேரங்களில் கடுப்பேற்றுகிறது. அவருக்கு இவ்வளவுதான் நடிக்க வருமா? அல்லது ஆதியை வேலை வாங்குவதில் இயக்குனர் சொதப்பி விட்டாரா?

நடிகை லட்சுமி மேனன் அழகாகவும் இருக்கிறார் பயத்தை ஏற்படுத்தும் பயங்கரமாகவும் இருக்கிறார்.

வந்த காட்சிகள் குறைவாக இருந்தாலும் சிம்ரனும், லைலாவும் சபாஷ் ரகம். அதிலும் குறிப்பாக லைலா நடிப்பு மிக சிறப்பு.

ஹாலிவுட் தரத்திற்கு படத்தை பிரமாண்டமாகக் காட்டியிருப்பது படத்தின் ஒளிப்பதிவாளர் தான். இசையமைப்பாளர் தமன் பின்னணிஇசை தான் படத்திற்கு பெரும் பலமாக வந்து நிற்கிறது.

பின்னணி இசையில் அதிலும் லைலாவுக்கு இசைக்கப்பட்ட பிஜிஎம் வேற லெவல் தான். மனம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையும் ஒரு விதமான மருந்து தான் என்பதை இப்படத்தில் வெளிச்சமாக காட்டியிருக்கும் இயக்குனர் அறிவழகனை  பாராட்டலாம்.

ஒட்டு மொத்தமாக சப்தம் தொழில் நுட்ப ரீதியாக சிறந்த படம்… ஆனால் திரைக்கதை படு வீக். புரியும்படி சொல்வதானால் ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டைடு….

 

கோடங்கி 2.5/5

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன