செவ்வாய்க்கிழமை, மே 13
Shadow

அஜீத் ரசிகர்களுக்கு குட்… சினிமா ரசிகர்களுக்கு பேட்… காமென் ஆடியன்சுக்கு அக்லி… கோடங்கி விமர்சனம் 2.5/5

 

 

ஒரு படம்னா ஒரு ஒன்லைன் கதை இருக்கனும், அது திரைக்கதையா மாறியிருக்கனும்…. சரி கழுத அதுவும் இல்லனா ஒரு நாலு சண்டை, 2 பாட்டு ஒரு செண்டிமெண்ட், ஒரூ சோகம்னு ஏதாவது இருக்கனும்… இப்படி எதுவுமே இல்லாம அஜீத் அப்படின்னு ஒரே ஒரு கேரக்டரை மட்டும் வைச்சி முழுசா படம் எடுக்கனும்னா அந்த பட்த்துக்கு குட் பேட் அக்லின்னு வைச்சிடலாம்.

கதைன்னு ஒன்னும் இல்ல… பழைய கெங்ஸ்டார் தன் குடும்பத்திற்காக நல்லவனாக மாறி, ஜெயிலில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் திரும்பி வரும் போது அவர் குடும்பத்திற்காகவே மீண்டும் கேங்ஸ்டராக நேரிட்டால் என்ன ஆகும் என்பதே ‘குட் பேட் அக்லி’ பட்த்துல நாம கண்டுபுடிச்ச கதை.

இந்தக் கதையை ஒரு தரமான கமர்சியல் ஆக்ஷன் படமாக எடுத்திருக்கலாம். ஆனாஇயக்குனர்  ஆதிக்கின் நோக்கம் கதையோ, திரைக்கதையோ இல்ல. அஜித்தை எந்தெந்த வகையில் கொண்டாட வேண்டுமோ அந்தந்த வகையில் கொண்டாட வேண்டும். அவ்வளவு தான். அதை திகட்ட திகட்ட செய்து ரசிகர்களை கொண்டாட வைத்து சாமான்ய ரசிகனை முகம் சுளிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை அஜித் ரிபெரென்ஸ் மட்டும் அல்ல, பிரசன்னா, திரிஷா, பிரபு, படத்தின் செட் அசிஸ்டென்ட், புரொடக்ஷன் பாய் என அனைவரின் ரிபெரென்சையும் விட்டு வைக்கவில்லை.

அபிநந்தனின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இரண்டு சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்தது. படத்தின் பின்னணியில் ஒலிக்கும் 40க்கும் மேற்பட்ட பழைய பாடல்கள் மத்தியில் ஜீவிபிரகாஷின் இசை ஒரே மாதிரியாகவே தெரிந்தது. சொல்லப்போனால் கொஞ்சம் இரைச்சலாகவே இருந்தது. பழைய அஜித்தை காண்பிக்கும் சில சிஜி காட்சிகள் மிக கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. ஆதிக் டிரேட் மார்க்கை எடிட்டர் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் ஒரு சில காட்சிகளில் பார்க்க முடிந்தது. பாடலுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சண்டை காட்சிகள் தியேட்டரில் தெறித்தன.

 

மொத்தத்தில் பட்த்தை பத்தி சொல்லனும்னா… அஜீத் ரசிகர்களுக்கு குட்… சினிமா ரசிகர்களுக்கு பேட்… காமென் ஆடியன்சுக்கு அக்லி…

 

மொத்தத்துல காத்துல கம்பு சுத்தி தண்ணியில்லாம குளிப்பாட்டி டவல் இல்லாம துடைச்சி விட்டிருக்கார் ஆதிக்… புரிஞ்சவன் பிஸ்தா!

 

கோடங்கி 2.5/5

130 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன