ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5

 

 

தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5

 

கமலின் தக் லைப் நாயகனின் வழி வந்த கதையா? அல்லது மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்தவானம் கதையைப்போல ஒரு கதையா? வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு கதையை தேடுகின்ற மேக்கிங் ஆப் மணி சாரின் ஒரு படைப்பா? இப்படி ஏராளமான கேள்விகளோடு இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் தக் லைப் யாருக்கெல்லாம் லைப் கொடுக்கப்போகிறது…

 

கதைப்படி…. எதுக்கு கதையெல்லாம் விடுங்க கழுத கதையா முக்கியம்… படம் எப்படி இருக்கு அதை சொல்லுங்கன்னு நீங்க யோசிக்கிறது தெரியுது…

 

வழக்கமான மணிரத்னம் படம்தான்னு நம்பிக்கை முதல்லயே வந்துடுது… எப்படின்னா நாசர் மகள் கல்யாணத்துக்கு முன்னாடியே காதலனை நம்பி கர்ப்பம் ஆகிடுறா… அங்க ஆரம்பிக்கிது படம்…

அப்பறம் அவ செத்து… அதுக்கு காரணமானவன கொன்னு கமல் ஜெயிலுக்கு போய் திரும்பி வர்றதுக்குள்ள வளர்த்தவங்ளே கமலுக்கு எதிரா திரும்பி அவர சுட்டு பனி மலையில தள்ளிவிட கமல் செத்துட்டாருன்னு யோசிச்சா அவர் திரும்ப வந்து எப்படி மத்தவங்களை போட்டுத்தள்ளுறாரா? இல்லியா? யாருக்கு லைப், யார் காலி இத கமல் சார் படம் மாதிரி கொஞ்சம், சிம்பு படம் மாதிரி கொஞ்சம், மணிரத்னம் படம் மாதிரி மிச்சம்னு சொல்லாம சொல்லுது படம்.

பிளாக் அண்ட் ஒயிட் கமல் கெட்டப் அத்தனை அழகு… நாயகனை, தேவர் மகனை திரும்பி பார்த்த நினைப்பு.

அதே நேரம் வயதான கமல் ஆக்ரோஷம் ஆலப்பறைய கிளப்புது.

கமலை மிஞ்சும் சிம்பு பல இடங்களில் செம அழகு… மிரட்டும் மேனரிசம்…. சில இடங்களில் செக்கச்சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு படமெல்லாம் வந்து போவதும் மறுக்கமுடியாத உண்மை. சண்டைக்காட்சிகளில் தெறிக்கவிடுகிறார் சிம்பு.

வயசே ஏறாதான்னு பெருமூச்சு விட வைக்கும் அழகி திரிஷா… பார் டான்சராக கிளாமரில் கலக்கி கமலுடன் ரொமான்சில் சிக்சர் அடிக்கிறார். வழக்கமா ஹீரோயின்களிடம் கமல் செய்வதை அவருக்கு பதில் திரிஷா செய்கிறார்… என்னன்னு கேக்கனும்  தோணுதா… அப்ப படத்த தியேட்டர்ல போய் பாத்து தெரிஞ்சிக்கலாம்.

ஐஸ்வர்ய லட்சுமி எமோஷனல் காட்சிகளால் தனக்கு தனி இடம் தேடிக் கொள்கிறார்.

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், நாசர், வையாபுரி, அஷோக்செல்வன் என முகம் தெரிந்தவர்களை அளவாக பயன்படுத்தியிருக்கிறார் இயகுனர் மணி ரத்னம்.

விருமாண்டிக்கு பிறகு கமலுடன் இணைந்த அபிராமி பல இடங்களில் கமலை ஓவர்டேக் செய்கிறார் நடிப்பிலும் ரொமான்சிலும்….

ஏ.ஆர்.ரஹ்மான் இசையும்,பாடல்களும் ஏனோ ஒட்டமறுக்கிறது… ரஹ்மான் சார் உங்க வட்டத்துல இருந்து வெளிய வாங்க…

ரவிகே சந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

இயக்குனராக மணிரத்னம் எப்போதோ ஜெயித்து விட்டார்… தக் லைப் அவர் லைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது.

மொத்தத்தில் தக்லைப் புதுசா எதுவுமில்லாத  வழக்கமான சினிமா.

 

கோடங்கி 3.5/5

592 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன