
மீண்டும் விமர்சனத்திற்குள்ளான ”முத்தமழை” பாடல்!
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. கமல் பேசிய மொழி விவகாரம் தொடர்பாக அங்கு வெளியாக நிலையில் படத்தை எந்த தடையும் இன்றி வெளியிட கமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தில் ‘முத்த மழை’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பட இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலை பாடகி சின்மயி பாடியிருந்தார். படத்தில் இடம் பெற்ற வெர்ஷனில் பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் சின்மயி பாடியிருந்த வீடியோ யூட்யூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்பாடல் படத்தில் ட்ரிம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘முத்த மழை’ பாடலின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு அரங்கத்தில் த்ரிஷா பாடுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இதில் தீ பாடியிருக்கும் நிலையில் த்ரிஷாவுக்கு தீயின் குரல் பொருத்தமாக இல்லை என ரசிகர்கள் கமெண்ட் இணையத்தை தெறிக்கவிடுகிறது. ஏற்கனவே திரிஷா கதாபாத்திரம் கடும் விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே தக்லைப் குறித்து பல கலவையான விமர்சன்ங்கள் வெளியான நிலையில் அதன் வீடியோ பாடலும் விமர்சனத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
