வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

பாக்யராஜ் உதவியாளர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வரும் ”அந்த 7 நாட்கள்”!

 

 

பாக்யராஜ் உதவியாளர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வரும் ”அந்த 7 நாட்கள்”!

 

தலைப்பை பார்த்த்தும் சமீப காலமாக பழைய சினிமாவை டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்வது போல பாகராஜின் அந்த 7 நாட்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறதோ என நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

இது புதுசு… பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம் ‘அந்த 7 நாட்கள்’.

இதில் புதுமுகங்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாக்யராஜ் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், மற்றும் பலர் நடித்துள்ளனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் எம்.சுந்தர் இiயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனராக இருந்தவர்.

படம் குறித்து தயாரிப்பாளர் கபீர்தாஸ் கூறியதாவது: இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். எங்கள் கதைக்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கும் நிச்சயம் மரியாதை செய்யும் விதமாக அமையும். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். அவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்த முயற்சியை தொடங்கி இருக்கிறோம். பிரமாண்ட படங்களை தயாரிக்க மாட்டோம்.

இயக்குனர் சுந்தர் கூறியதாவது: 10 வருஷத்துக்கு மேலாக இந்த கதையை எழுதி வைத்திருந்தான். இந்த கதைக்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும் என கேட்ட்தால் என் குருநாதர் பாக்யராஜ் சார் அந்த 7 நாட்கள் தலைப்பை மகிழ்ச்சியாக கொடுத்தார். என் மகன் ச்ச்சின் சுந்தர் தான் இந்த பட்த்தின் இசையமைப்பாளர். தமிழ் சினிமா வரலாற்றில் அப்பா இயக்குனர் ஆகவும், மகன் இசையமைப்பாளராகவும் அறிஉகம் ஆகும் முதல் படம் இதுவாகதான் இருக்கும். அதற்கு வாய்ப்பு கொடுத்த பெஸ்ட் காஸ்ட் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்றார்.

இந்தபடம் வரும் செப்டம்பரில் உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.

 

93 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன