
’சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம் 3/5
ஒரு விளம்பரத்தால் தலைமுடியை இழந்து சொட்டையானதால் திருமணம் ஆகாமல் தவிக்கிற ஹீரோ.
ஒரு வீடியோவால் திருமணம் தடைபடுகிற ஹீரோயின், ரீல்ஸ் மோகத்தால் வாழ்க்கையை இழக்கிற இன்னொரு நாயகி இவர்களை சுற்றிய கதைதான் சொட்ட சொட்ட நனையுது படம்.
கதைப்படி ஹீரோவுக்கு முடி கொட்டி வழுக்கை விழுகிறது. இதனால் எந்த பொண்ணும் ஓகே சொல்லாத்தால் திருமணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. கடைசியில் ஹீரோ வீட்டு எதிர்வீட்டு பெண் கல்யாணத்துக்கு ஓகே சொல்கிறார். திருமண தினத்தில் நண்பன் அனுப்பிய வீடியோவால் அந்த திருமணத்தை ஹீரோ நிறுத்த் விடுகிறார்.

யாரோ கொடுத்த ஐடியாவில் திடீரென தலையில் முடியுடன் வரும் ஹீரோவைஒரு இன்ஸ்டா பிரபலம் கல்யாணம் செய்து கொள்ள ரெடி ஆகிறார். அந்த கல்யாணம் நடந்ததா? வழுக்கை தலையில் எப்படி முடி வந்த்து என்பதை காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
வழுக்கை விழுந்தவர்களின் எண்ண ஓட்ட்த்தை அப்படியே திரைக்கதையில் கொண்டு வந்து முடிந்த மட்டும் கதையை நகர்த்தியுள்ள இயக்குனர் நவீஸ் எஸ் பரீத் உண்மையில் சபாஷ் வாங்க தகுதியானவர்தான்.

ஹீரோவாக நடித்துள்ள ராஜாவும் நிஜமாகவே முடியிழந்தவர்களின் வலியை அழகாக வெளிப்படுத்தி பல இடங்களில் சபாஷ் பெறுகிறார்.
சிரிப்புக்காக பல விஷயங்கள் பட்த்தில் இருந்தாலும் சிலது யோசிக்க வைக்கிறது. பலரின் நிஜ வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை தெளிவாக்குகிறது. இரண்டு ஹீரோயின்களும் கிடைத்த வாய்ப்பை சரியாகவே செய்து இருக்கிறார்கள்.

கிளைமாக்சில் தலையில் முடி இருப்பதை விட மூளை இருந்தால் போதாதா என ஒரு டிவிஸ்ட் வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். வழுக்கை வாழ்க்கையை மாற்றுமா? படம் பாருங்களேன் உங்களுக்கே புரியும்.
கோடங்கி 3/5

