செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

‘அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது – அமீர் பாராட்டு

 

‘அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது – அமீர் பாராட்டு

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.


பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார்.

 

‘டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று அமீர் பாராட்டினார். ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார்

அருவா சண்ட படத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் இந்த படம் மூலம் தனக்கு மீண்டும் ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என்றும், வசனங்கள் அனைத்தும் அத்தனை அருமையாக இருப்பதாகவும் பாராட்டி உள்ளார்.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு டிசைனே அருமையாக இருக்கிறது அதிலேயே கதையை சொல்லுகிறீர்கள் என இயக்குனர் ஆதியை நடிகர் சத்யராஜ் பாராட்டியிருந்தார்.


இப்போது படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குனர் அமீரும் பாராட்டியிருக்கிறார். இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

517 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன