
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி
‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார், சுபா வசனம் எழுதுகின்றனர், திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
ஏற்கெனவே, படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு (2017) ‘கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பட அறிமுக விழாவின் போது ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். அவரை வைத்தே பல பட டிசைன்களும் வெளியிடப்பட்டன. படம் தொடங்குவது தாமதமான நிலையில் திடீரென ஸ்ருதி சங்கமித்ராவில் இருந்து விலகினார்.
இந்த சூழலில் இப்போது தீஷா புது நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தீஷா பதானி தோனி படத்தில் நடித்திருந்தாலும் பெருசாக பேசப்படவில்லை. ஒரு சினிமாவுக்காக டாப்லெஸ் போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகே தீஷா பதானிய ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர்.
அந்த டாப்லெஸ் புகழ் நாயகிதான் சரித்திர படமான சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதில் இணைந்திருக்கிறார்.
