செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!

கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. இதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதை காண்பதற்காக கீர்த்திசுரேசுடன் அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் விஷால், இயக்குனர் லிங்குசாமி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பை காண குடும்பத்தினர் வந்ததால் கீர்த்திசுரேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.


கீர்த்திசுரேஷ் சூர்யாவுடன் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைக்கு வந்துள்ளது. இப்போது விஷாலுடன் ‘சண்டக்கோழி-2’ விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

438 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன