வியாழக்கிழமை, மே 28
Shadow

என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

“ராஜஸ்தானில் 2015-ம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பிரவீண் தொகாடியா பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும், அதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸார் என்னை கைது செய்ய வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பவர்கள் நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தான் எனது மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டேன். எனது குரலை நசுக்க சதி நடக்கிறது. நான் பேசக்கூடாது என சிலர் எண்ணுகின்றனர். என்னை கொலை செய்ய சிலர் இங்கு வந்துள்ளனர்’’ பிரவீண் தொகாடியா எனக்கூறினார்.

இதனிடையே, பிரவீண் தொகாடியா காணாமல் போன சர்ச்சை குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில போலீஸ் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா , 2015ம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், ராஜஸ்தான் போலீஸார் அவரை கைது செய்ய குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த தகவல் பரவியதும், உடனடியாக ஏராளமான விஎச்பி தொண்டர்கள் அங்கு திரண்டனர்.

அவர் கைது செய்யப்பட்டு ரகசியமாக அழைத்துத் செல்லப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிய வந்ததும், போலீஸ் உயரதிகாரிகள் அங்கு விரைந்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவது உறுதி செய்யப்பட்டது.

மயக்கமான நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்

356 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன