வியாழக்கிழமை, மே 28
Shadow

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2..!
விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

இதனை முன்னிட்டு இந்த படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்று, படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. முதலில் இந்த படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இப்போது ஃபிப்ரவரி- 2, ரிலீசுக்கு நல்ல நாள் குறித்துள்ளார்கள்.

இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக்குடன் காயத்ரி, நிகாரிகா கதாநாயகிகளாக நடிக்க, இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்.

‘கருப்பன்’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள இந்த படத்தை ‘7C என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் ‘அம்மே நாராயணா’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்ற ராமன் குறித்த வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த வசனம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

470 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன