செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு

ராம்கோபால் வர்மா  ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம்  இணையதளம் மூலம் வெளியாகியது. இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார்.   .
இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் இணையதளம் குறித்த தகவலை ராம்கோபால் வர்மா  தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அமெரிக்க இணையதளமான http://www.godsextruth.online என்ற இணையதளத்தில்  26ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த படம் வெளியானது.
இந்த இணையதளத்தை படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும், ஒருமுறை கட்டணம் செலுத்தினால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் மறுபடியும் கட்டணம் செலுத்த வேண்டும்.  இந்தியாவில் ரூ 150 ஆக கட்டணம் நிர்ணயிக்கபட்டு உள்ளது. இலங்கையில் ரூ.200 கட்டணம்.
இந்த படத்தின்  வெளிப்படையான உள்ளடக்கம் காரணமாக இந்தத் திரைப்படம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில்  ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது.
476 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன