செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

 நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜயசாந்தி   கூறியதாவது:–
நான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாக வதந்திகள் உலா வருகின்றன. அதில் உண்மையில்லை. தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை. ஆந்திர அரசியலிலேயே தீவிரமாக ஈடுபடுவேன். காங்கிரஸ் கட்சி எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சந்திரசேகரராவ் ஆட்சி மீது தெலுங்கானா மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
2019–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயார். விரைவில் தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கொண்டுவர பிரசாரம் செய்வேன்.
618 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன