புதன்கிழமை, செப்டம்பர் 9
Shadow

வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.
இப்படத்தை ‘சாமிடா’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கன்னியும் காளையும் செம காதல்’ ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
332 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன