வியாழக்கிழமை, செப்டம்பர் 10
Shadow

கமலுக்கு சகுனம் சரியில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரஜினி, கமல் அரசியல் குறித்து அவர் கூறியதாவது:-

கட்சி தொடங்கும் கமல் ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரில்லை. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். அரசியல் கட்சிகளிடம் கமல் ஆதரவு கோருவது கேலிக்கூத்தாக முடியும். எத்தனை கமல் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

வயதை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால், கட்சி தொடங்கும் கமலை வாழ்த்தியிருக்கலாம்.

 

282 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன