வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

‘நானும் மதுரைக்காரன் தான்’- ரசிகர்கள் வெள்ளத்தில் கமல்ஹாசன் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்க உள்ளார். ராமேசுவரத்தில் அரசியல் பயணம் மேற்கொள்வதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் “முதல்வரே வருக, முதல்வரே வருக” என கோ‌ஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இப்போது எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். நாளை காலை ராமேசுவரத்தில் எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். மாலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை விளக்க உள்ளேன்.

ராமேசுவரம் சென்று விட்டு பரமக்குடி, மானாமதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு மாலையில் மதுரை வருவேன். ராமேசுவரமும் எனது ஊர் தான். மதுரையும் எனது ஊர் தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர். பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

289 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன