
கோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது.
அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு விதித்திருந்தது.
உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில், ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்க வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
283 Views
