சனிக்கிழமை, மே 30
Shadow

கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

லைகா நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுபோன்று கதையை முடித்து இருந்தனர்.

இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது.

 இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் முதல் பாடலை மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
292 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன