சனிக்கிழமை, மே 30
Shadow

ராஜஸ்தான் செல்லும் ‘சாமி-படக்குழு..!

விக்ரம் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘சாமி-2’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனாக இந்த பாகத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து வடஇந்தியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழு மார்ச்சில் ராஜஸ்தான் செல்லவிருக்கிறது. அங்கு படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாகவும், விவேக், பிரபு, சூரி, ஓஏகே சுந்தர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரமின் `இருமுகன்’, படத்தை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
291 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன