சனிக்கிழமை, மே 30
Shadow

விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
442 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன