டிடிவி.தினகரன் அறிமுகப்படுத்திய கட்சி கொடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது.
![]() |
![]() |
மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. புதிதாக தொடங்கும் இயக்கத்தின் பெயர், கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், டிடிவி தினகரன் புதிய இயக்கத்தின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” மற்றும் கறுப்பு வெள்ளை சிவப்பு வண்ணக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், தினகரன் அறிமுகப்படுத்திய கொடியை ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினகரன் அறிமுகப்படுத்தியுள்ள கொடி, அதிமுகவின் கட்சிக் கொடியை போல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கொடி இருப்பதால், அது தொண்டர்களைக் குழப்பமடைய செய்யும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் மனுவை சிவில் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


